#BREAKING:-வன்னியர்களுக்கு வந்தது தீர்ப்பு.. 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது..!

#BREAKING:-வன்னியர்களுக்கு வந்தது தீர்ப்பு.. 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது..!

Update: 2022-03-31 11:38 GMT

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது. 1994-ம் ஆண்டு சட்டத்தை மீறும் வகையில் இட ஒதுக்கீடு கூடாது.

உள் ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான நியாயமான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். ஜாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பு வழங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.

Similar News