மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம்!!

மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம்!!

Update: 2022-02-13 04:35 GMT

திமுகவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம்.

முன்னதாக திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நபர் என்று கூறப்பட்ட இவர், கடந்த 2020-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய கு.க.செல்வம், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கு.க.செல்வம் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

Similar News