கள்ளக்குறிச்சி வன்முறை: சிக்கும் வாட்ஸ்அப் குரூப் அன்மின் !!

கள்ளக்குறிச்சி வன்முறை: சிக்கும் வாட்ஸ்அப் குரூப் அன்மின் !!

Update: 2022-07-18 18:30 GMT

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நேற்று நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தைக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, கலவரத்துக்கு அவர்தான் பொறுப்பு என்றும் கூறியது. 

எனினும் கலவரத்தில் தங்கள் தப்பில் இருந்து யாரும் ஈடுபடவில்லை என்று மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். எனினும் நேற்று நடந்த கலவரம் திட்டமிட்ட வன்முறை என்று தெரிவித்த நீதிபதி, மாணவர்களின் சான்றிதழ் எரிக்கப்பட்டுள்ளன. 4500 மாணவர்களின் எதிர்காலம் என்ன என்றும் கேள்வி எழுப்பியது.

கலவரத்துக்கு யார் காரணம் என்பதை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், போலீசார் விசாரணையில் தங்களது பவரை காட்ட வேண்டும் என்று கூறியது. 

கலவரகாரர்களை கைது செய்ய சிறப்பு படை அமைக்க உத்தரவிட்டது. வாட்ஸ்அப் குரூப் அட்மீனை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சில சமூக ஊடகங்கள் மீடியா டிரையல் நடத்தியிருப்பதாக தெரிவித்த நீதிபதி, மீடியா டிரையல் நடத்திய யூ டியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். டிராக்டர் கொண்டு பஸ்சை சேதப்படுத்துவதெல்லாம் சகித்து கொள்ளவே முடியாது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி சதீஷ் குமார், வழக்கு விசாரணை அறிக்கையை  29ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், சில வாட்ஸ்அப் குரூப் மூலம் வதந்தியை பரப்பி இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டதாகவும் புகார் உள்ளது. எனவே வாட்ஸ்அப் குரூப் அன்மின் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.  


newstm.in

Similar News