ஆபாச வார்த்தைகளுடன் கமல் ரசிகர்கள் போஸ்டர்.. கட்சி நிர்வாகிகள் அடாவடி !!

ஆபாச வார்த்தைகளுடன் கமல் ரசிகர்கள் போஸ்டர்.. கட்சி நிர்வாகிகள் அடாவடி !!

Update: 2022-05-24 18:53 GMT

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகமாக எதிர்பார்க்கும் படங்களில் முக்கியமானதாக விக்ரம் உள்ளது.

இப்படத்தில் பத்தல பத்தல பாட்டில் மத்திய அரசை விமர்சித்து வரிகள் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ட்ரெய்லரில் மிரட்டும் வகையில் வசனம் பேசும் கமல் ஆபாச வார்த்தையை உபயோக படுத்துவது போன்ற காட்சிகள் உள்ளன.

இந்நிலையில், அதனை பயன்படுத்தி, "சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! ---- பாத்துக்கலாம்..!" என்ற வசனம் அடங்கிய போஸ்டரை மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஒட்டியுள்ளனர். 

அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து  மதுரை திடீர் நகர் மற்றும் தெற்கு வாசல் காவல்துறையினர் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த  போஸ்டர்கள் போலீசாரால் அகற்றப்பட்டது.

மதுரை காரங்க போஸ்டர் அடிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றாலும் இதுகொஞ்சம் ஓவர் தான் என பலரும் கூறுகின்றனர். 


newstm.in

Similar News