கரூரில் பரபரப்பு.. கண்டித்த ஆசிரியரை ரவுடிகளுடன் வந்து மிரட்டிய மாணவன்..!

கரூரில் பரபரப்பு.. கண்டித்த ஆசிரியரை ரவுடிகளுடன் வந்து மிரட்டிய மாணவன்..!

Update: 2022-03-25 04:30 GMT

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஒழுங்காக முடி வெட்டவில்லை எனவும். ரவுடிகள் போல் இருப்பதாகவும் உடற்கல்வி ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளியில் இருந்து வெளியே சென்று நண்பர்கள் மற்றும் ரவுடிகளை அழைத்து வந்து உடற்கல்வி ஆசிரியரை மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், மிரட்டிய மாணவர் மற்றும் அவருடன் வந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

மாணவனின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, சம்பந்தப்பட்ட மாணவன் திருந்த ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டதை அடுத்து மாணவன் மீது மட்டும் புகார் வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும், மாணவன் அழைத்து வந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியதை அடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News