காவித்துண்டு, பாரத் மாதா கி ஜே கோஷம்.. பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ் !!
காவித்துண்டு, பாரத் மாதா கி ஜே கோஷம்.. பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ் !!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை மதுரை விமான நிலையத்தில் தேனிக்கு சென்றார். வழியில் அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பிறகு தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தர்ம சாஸ்தா திருக்கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பலர் இருந்தனர். கோயில் முன்பு அதிமுக தொண்டர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என ஒ. பன்னீர்செல்வத்துக்கு மேளதாளம் முழங்க 5000க்கும் மேற்பட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அங்கிருந்து பிரச்சார வேனில் தேனி நோக்கி செல்லும் போது ஆண்டிபட்டி முருகன் திரையரங்கு முன்பு ஓபிஎஸ்சை பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்றனர். மேலும் அக்கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பாண்டி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.
அப்போது பாஜக தேனி மாவட்ட செயலாளர் பாண்டி திடீரென ஓபிஎஸ்சுக்கு காவி துண்டு அணிவித்தார். பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பினர். பின்னர் பெரியகுளம் பகுதியில் வந்தடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு அவர் பழைய வீட்டு முன்பு ஓ.ராஜா மகன் ரோசாப்பூ மாலை அணிவித்து குடும்பத்துடன் வரவேற்றார்.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அந்த தைரியத்தில் தான் தற்போது தனி ஆளாக நின்று எடப்பாடி பழனிசாமி அணியுடன் மோதி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவினர் சந்தித்து காவி துண்டு அணிவித்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்பாக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக மேலிடம் சில தகவல்களை கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது பேரணியை தொடங்கியுள்ளதாகவும் இந்த நிலையில் பாஜக ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
newstm.in