உத்தரப்பிரதேச முதல்வருக்கு கேரள முதல்வர் கொடுத்த ‘நச்’ பதிலடி!
உத்தரப்பிரதேச முதல்வருக்கு கேரள முதல்வர் கொடுத்த ‘நச்’ பதிலடி!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் அளித்துள்ள ட்விட்டர் பதில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'கேரளாவைப் போல உத்தரப்பிரதேசம் மாறி விடுமோ என்று யோகி ஆதியத்நாத் அச்சமடைகிறார்.
If UP turns into Kerala as @myogiadityanath fears, it will enjoy the best education, health services, social welfare, living standards and have a harmonious society in which people won't be murdered in the name of religion and caste. That's what the people of UP would want.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) February 10, 2022
அப்படி மாற்றம் அடைந்தால், சிறந்த கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்கள் உத்தரப்பிரதேசத்திற்கு கிடைக்கும். சமூக நல்லிணக்கம் ஏற்படும். மதம் மற்றும் சாதியின் பெயரால் பொதுமக்கள் கொல்லப்பட மாட்டார்கள். இதைத்தான் அம்மாநில மக்களும் விரும்புவார்கள்.' என்று கூறியுள்ளார்.
முன்னதாக உத்தப்பிரதேச பாஜக வாக்குறுதிகள் குறித்து யோகி ஆதித்யநாத் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், உத்தரப்பிரதேச வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் உத்தரப்பிரதேசம் கேரளாவாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறிவிடும் என்று கூறியிருந்தார்.
newstm.in