நடிகையாகிறார் குஷ்புவின் மூத்த மகள்..
நடிகையாகிறார் குஷ்புவின் மூத்த மகள்..
தனது மூத்த மகள் அவந்திகா விரைவில் நடிகையாகத் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக பாஜக நிர்வாகியும் பிரபல நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
1990-களில் தமிழ் திரையுலகில் கலக்கிவந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகையாக குஷ்பு அறிமுகமானார். ரஜினி, கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடமும் பிடித்தார்.
பின்னர் முறைமாமன் படத்தில் நடித்தபோது இயக்குநர் சுந்தர் சி-யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உண்டு. இந்நிலையில் தனது மூத்த மகள் அவந்திகா (21) விரைவில் நடிகையாகவுள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டரில் அவர் கூறியதாவது, என் மூத்த மகள், லண்டனில் உள்ள புகழ்பெற்ற நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். சொந்தமாக முயற்சி செய்யவேண்டும் என அவர் எண்ணுவதால் அவருடைய போராட்டம் இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறது. அவரை நாங்கள் அறிமுகப்படுத்த மாட்டோம், யாரிடமும் பரிந்துரை செய்ய மாட்டோம். அவருக்கு உங்கள் வாழ்த்துகள் தேவை என்று கூறியுள்ளார்.
And BTW my elder one just finished her acting course with flying colors in one of the most prestigious acting school in London. Her struggle starts now as she wants to make it on her own. So no, we won't be launching her or recommending her anywhere. She needs your blessings 🙏🙏
— KhushbuSundar (@khushsundar) May 27, 2022
newstm.in