தலைகீழாக கொடி ஏற்றிய குஷ்பு.. பதறிய பாஜக நிர்வாகிகள்..!

தலைகீழாக கொடி ஏற்றிய குஷ்பு.. பதறிய பாஜக நிர்வாகிகள்..!

Update: 2022-04-07 05:15 GMT

பாஜக நிறுவன நாளையொட்டி சென்னை தியாகராயநகரில் இன்று அக்கட்சியின் கொடியை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு ஏற்றினார். அப்போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது.

பாஜக நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பாஜகவின் ஸ்தாபன நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


கட்சி அலுவலகங்களில் பாஜக தலைவர்கள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர். அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பூ பாஜக கொடியை ஏற்றினார்.

அப்போது அவர் கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த நிர்வாகிகள் கொடியை கீழே இறக்கி அதை சரி செய்து மீண்டும் ஏற்றினர்.

Similar News