200 நாடுகள் தேடியும் சிக்காத போதைப்பொருள் கடத்தல் மன்னன்.. காதலியின் முத்தத்தால் சிக்கினார் !!

200 நாடுகள் தேடியும் சிக்காத போதைப்பொருள் கடத்தல் மன்னன்.. காதலியின் முத்தத்தால் சிக்கினார் !!

Update: 2022-04-18 18:19 GMT

மெக்சிகோவை சேர்ந்தவர் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ. பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனான இவரை 200க்கும் மேற்பட்ட நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. மேலும் 196 நாடுகள் அவரை கைது செய்வதற்கான இன்டர்போல் ரெட் வாரண்டை பிறப்பித்துள்ளன.

இப்படி உலக நாடுகளே தேடியபோதும் அவர் சிக்காமல் தண்ணி காட்டி வந்தார். ஆனால், ஓல்குயின் பெர்டுகோ தனது காதலிக்கு கொடுத்த ஒரு லிக் லாக் முத்தத்தால் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

கொலம்பிய நாட்டில் உள்ள கலியில் இருக்கும் மலை உச்சி பகுதியில் ஓல்குயின் பெர்டுகோ தனது காதலியுடன் சொகுசு பங்களாவில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் முத்தமிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

இருவரும் முத்தமிடும் புகைப்படத்தை காதலி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கொலம்பிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து உடனே கொலம்பிய அதிகாரிகள் தலைமறைவாக இருந்து சொகுசு பங்களாவிலேயே ஓல்குயின் பெர்டுகோ கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை தங்களது நாட்டிற்கு கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.


newstm.in

Tags:    

Similar News