“உதட்டில் முத்தமிடுவது குற்றமல்ல” – நீதிமன்றம் அதிரடி!!

“உதட்டில் முத்தமிடுவது குற்றமல்ல” – நீதிமன்றம் அதிரடி!!

Update: 2022-05-16 06:15 GMT

உதட்டில் முத்தமிடுவது இயற்கைக்கு மாறான பாலுறவு குற்றம் அல்ல என்று கூறியுள்ள மும்பை உயர்நீதிமன்றம் போக்சோ குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த 14 வயது சிறுவன் வீட்டில் பணத்தை திருடி ஆன்லைன் கேமிற்கு ரீசார்ஜ் செய்ய முயன்றுள்ளார். அதை கண்டுபிடித்த தந்தை யாரிடம் பணத்தை கொடுத்தாய் என்று கேட்ட போது, ரீசார்ஜ் கடையில் இருக்கும் நபரிடம் கொடுத்தாக கூறினான்.

அப்போது ரீசார்ஜ் கடை நபர் தனது உதடுகளில் முத்தமிட்டதாகவும் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டதாகவும் சிறுவன் தந்தையிடம் கூறினார். அதைத்தொடர்ந்து, சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ரீசார்ஜ் கடைக்காரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்தது. சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நிரூபிக்க இயலவில்லை என்று நீதிபதி பிரபுதேசாய் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில், இயற்கைக்கு மாறான உடலுறவு என்பது முதன்மையான பார்வைக்கு பொருந்தாது என்று நீதிபதி பிரபுதேசாய் கூறினார். பாதிக்கப்பட்டவரின் அந்தரங்கத்தை தொட்டு அவரது உதடுகளை முத்தமிட்டார் என்பது பிரிவு 377இன் கீழ் குற்றமாகாது என்று கூறினார்.

உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பதாரருக்கு ஜாமீன் பெற உரிமை உண்டு என்று கூறிய உயர்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.30,000 பிணைத் தொகையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

newstm.in

Similar News