நூல் விலை உயர்வால் வேலை நிறுத்தம்..!!

நூல் விலை உயர்வால் வேலை நிறுத்தம்..!!

Update: 2022-05-16 09:55 GMT

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் இன்றும் நாளையும் (மே16, 17) பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.

இதனால் நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில், 10 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 20 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

நூல் விலை 480 ரூபாய் என வரலாறு காணாத உச்ச நிலையை அடைந்துள்ளது. இதனால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசு நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதி தடை செய்து அறிவிக்க வேண்டும் என கோரி இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தியாளர்களின் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் விசைத்தறி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

newstm.in

Similar News