தலித் தலைவர் வாயில் இருந்து உணவை எடுத்து சாப்பிட்ட காங். எம்எல்ஏ.. வைரல் வீடியோ !!

தலித் தலைவர் வாயில் இருந்து உணவை எடுத்து சாப்பிட்ட காங். எம்எல்ஏ.. வைரல் வீடியோ !!

Update: 2022-05-23 17:00 GMT

சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக காங்கிரஸ் எம்எல்ஏவின் செயல் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. 

கர்நாடகாவின் சாம்ராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக ஜமீர் அஹமது கான் உள்ளார். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான இவர் அம்பேத்கர்  ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். 

அப்போது, ஜமீர் அஹமது கான், தலித் அமைப்பின் தலைவர் ஒருவருக்கு இனிப்பை ஊட்டி விட்டார். பதிலுக்கு தலித் தலைவர் இனிப்பை ஊட்டி விட முற்பட்ட போது அவர் தடுத்தார். மாறாக, அவரது வாயில் உள்ள இனிப்பை எடுத்து ஊட்டி விட சொல்லி அதன்படி ஜமீர் அஹமது கான் இனிப்பை சாப்பிட்டார். 

மக்களிடையே எந்த மத, இன வேறுபாடும் இல்லை என்பதை உணர்த்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் ஜமீர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவுக்கு பல தரப்பிலிருந்தும் கருத்துகள் குவிந்து வருகின்றன.

டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி நினைவு நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தலித் தலைவர் நாராயணா சுவாமிஜியுடன் ஜமீர் பங்கேற்றிருந்த போது, மிகவும் உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அனைவர் முன்னிலையிலும் இப்படி செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் இதனை கைதட்டி வரவேற்றனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.
 


newstm.in

Tags:    

Similar News