தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட காங். தலைவர் சோனியா.. கட்சியினர் அதிர்ச்சி !!
தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட காங். தலைவர் சோனியா.. கட்சியினர் அதிர்ச்சி !!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்துவரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சோனியாகாந்தி தலைமையில் முழுவீச்சில் இயங்கி வருகிறது. பல்வேறு கூட்டங்கள் நடத்தியும், அவ்வப்போது ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறது. எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடுமையாக போராடி வருகிறார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டீல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சோனியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்ற அவரது மகளும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். மேலும் அவர் அங்கிருந்து உடனடியாக டெல்லி திரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சோனியாகாந்தி விரைவில் குணமடையவேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
newstm.in