தொடங்கியது கும்மாங்குத்து.. பொதுக்குழு மண்டபத்தில் அதிமுக பேனர்கள் கிழிப்பு !!

தொடங்கியது கும்மாங்குத்து.. பொதுக்குழு மண்டபத்தில் அதிமுக பேனர்கள் கிழிப்பு !!

Update: 2022-06-22 18:48 GMT

அதிமுகவில் கும்மாங்குத்து நடக்கும் அளவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம் பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது. ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு குறிந்தது. எடப்பாடி பழனிசாமி பக்கம் நோக்கி நிர்வாகிகள் படையெடுத்தனர். எனினும் தனது முடிவில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார்.

இந்த நிலையில், காவல்துறையில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என எத்தனையே முயற்சி எடுத்தும் பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பால் நிறுத்தமுடியவில்லை. இதனால் நாளை பொதுக்குழு கண்டிப்பாக நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதனையொட்டி சென்னை வானகரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள்தான் பேனரை கிழித்ததாக இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இருதரப்புக்கும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், ஸ்ரீவாரு மண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தற்போது பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை நோக்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணியாக சென்று வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிமுக விதிகளில் திருத்தம் செய்ய ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் பொதுக்குழுவில் கட்சி விதிகளை திருத்தக்கூடாது எனவும் எழுப்பினர்.

newstm.in

Similar News