எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை.. தேதியை முடிவு செய்த மத்திய அரசு?

எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை.. தேதியை முடிவு செய்த மத்திய அரசு?

Update: 2022-04-26 20:20 GMT

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கி மே 9 ஆம் தேதி நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

எல்.ஐ.சி., பொதுப் பங்கு வெளியீடு மூலம் அந்நிறுவனத்திலுள்ள 5 சதவீத பங்குகளை அரசு விற்க உள்ளது. மார்ச் மாதத்திற்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரியில் ஏற்பட்ட ரஷ்யா - உக்ரைன் போரினால் உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. கடுமையான ஏற்ற இறக்கத்துடன் சந்தை காணப்பட்டதால் அந்த சமயத்தில் நாட்டின் மிகப்பெரிய பங்கு வெளியீட்டை அனுமதிப்பது நஷ்டத்தையே ஏற்படுத்தும் என எண்ணி ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கி மே 9 ஆம் தேதி நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) 5 சதவீதப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.21,000 கோடி ஆகும். 

newstm.in

Tags:    

Similar News