எல்ஐசி பங்கு விற்பனை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

எல்ஐசி பங்கு விற்பனை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

Update: 2022-02-15 09:40 GMT

எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவுவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "பல ஆண்டுகளாக எல்ஐசி, கோடிக்கணக்கான இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதன் திறமையான செயல்பாட்டின் மூலம் சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகிறது என பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் டிஆர்ஹெச்பியை செபியிடம் தாக்கல் செய்து அதன் 5% பங்குகளை விற்பது சந்தேகத்திற்கு இடமின்றி தனியார்மயத்தை நோக்கி நகர்வது மற்றும் மிகவும் விரும்பத்தகாதது.

இது எமது மக்களின் நலனுக்காகவோ அல்லது அமைப்பின் நலனுக்காகவோ இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களை கட்டமைக்க வேண்டுமே தவிர விற்பனையில் ஈடுபடுவதில்  மும்முரம் காட்ட கூடாது.

எனவே எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

Similar News