ஒட்டுமொத்தமாக வீடுகளை மூழ்கடித்த மண்சரிவு.. 24 பேர் பலி.. நாடு முழுவதும் சோகம் !!
ஒட்டுமொத்தமாக வீடுகளை மூழ்கடித்த மண்சரிவு.. 24 பேர் பலி.. நாடு முழுவதும் சோகம் !!
பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்த சோகம் நாட்டையே உலுக்கியுள்ளது.
பிரேசில் நாட்டின் சயோ பலோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. இதனிடையே, கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சயோ பலோவில் பெய்துவரும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் திடீரென பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகளில் மண் சரிவில் சிக்கின. பல இடங்களில் தண்ணீருடன் மண்ணும் கலந்துசென்றதால் மக்கள் அதில் சிக்கினர். அந்த வகையில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்து உடல்கள் கிடைப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
newstm.in