போதை தலைக்கேறி நட்சத்திர ஹோட்டலில் அரை நிர்வாணத்துடன் வழக்கறிஞர் ரகளை..!!
போதை தலைக்கேறி நட்சத்திர ஹோட்டலில் அரை நிர்வாணத்துடன் வழக்கறிஞர் ரகளை..!!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கோர்ட்யார்டு ஓட்டலில், நேற்றிரவு வழக்கறிஞர் ஒருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது விடிய விடிய மது அருந்திய அவர், அதிகாலை அரை நிர்வாண கோலத்தில் அங்கிருந்து வௌியேற முயன்றதாக தெரிகிறது.
இதனை கண்ட ஓட்டல் மேலாளர் மற்றும் ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி வாடகை பணத்தை கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், பணம் தரமாட்டேன் என கூறி வரவேற்பறையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஓட்டல் மேலாளர் அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார் அவரை கைது செய்து, விசாரித்ததில், அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த ஆஸ்டின் என்பதும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுவதும் தெரியவந்தது.