குறையாத பதற்றம்.. உக்ரைனில் இருந்து 3 நாட்களில் 3,68,000 பேர் வெளியேற்றம் !!
குறையாத பதற்றம்.. உக்ரைனில் இருந்து 3 நாட்களில் 3,68,000 பேர் வெளியேற்றம் !!
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு அடுத்தப்படியாக தற்போது பெரும் விவாதமாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது ரஷ்யா- உக்ரைன் போர். இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது.
இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்த சூழலில் உக்ரைன் மீதான போர் தொடர்ந்து 3ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே ராணுவ வீரர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் உக்ரைன் பொதுமக்கள் துப்பாக்கி ஏந்தியுள்ளனர். மேலும் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இது ரஷ்ய வீரர்களின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
இதனால் உக்ரைனில் உள்ள 7.5 மில்லியன் குழந்தைகளின் உயிர் மற்றும் நல்வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் வருத்தம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்காக கடந்த 8 ஆண்டுகளாக யுனிசெப் பணியாற்றி வரும் கிழக்கு உக்ரைனில், போர் காரணமாக உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான குடிநீர் கூட இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து இதுவரை 3,68,000 பேருக்கும் அதிகமானோர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் போலந்திற்குள் நுழைந்துள்ளனர், அங்கு வியாழன் முதல் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 1,56,000 பேர் எல்லை கடந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
newstm.in