“தோல்வியில் இருந்து பாடம் கற்போம்” : ராகுல் காந்தி!!

“தோல்வியில் இருந்து பாடம் கற்போம்” : ராகுல் காந்தி!!

Update: 2022-03-10 20:29 GMT

தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம், மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ், மற்ற மாநிலங்களிலும் வாக்குகளைப் பெற தவறி விட்டது

மற்ற மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர்,கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், மக்களின் தீர்ப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக கடினமாக உழைத்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள், செயல்வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்விகளில் இருந்து பாடம் பெறுவோம். இந்திய மக்களின் நலனுக்கான காங்கிரசின் பணிகள் தொடரும் என்று அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தது. தற்போது பஞ்சாபில் ஆட்சி பறிபோயுள்ளதால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.

newstm.in

Similar News