ஒட்டு போட வரலாம் அதுக்காக இப்படியா..!!

ஒட்டு போட வரலாம் அதுக்காக இப்படியா..!!;

Update: 2022-05-22 04:20 GMT

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் ஜிம் ஃபின். அவர் தனது குடும்பத்தோடு அப்பகுதியில் உள்ள போண்டி கடற்கரைக்கு சென்று உள்ளார். பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதை அறியாமல் ஜிம், தனது மனைவி மற்றும் 8 மாத குழந்தையுடன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்போது, அங்குள்ளவர்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுவதை அறிந்து கொண்ட ஜிம், தனது கண்காணிப்பில் இருந்த 8 மாத மகள் அலெக்ரா ஃபின்னுடன், அருகில் உள்ள போண்டி பீச் வாக்குச் சாவடிக்கு பீச் உடையில் சென்றார்.

அங்கு பரபரப்பாக ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த நிலையில், பீச் உடையுடன், தன் குழந்தையுடன் பங்கேற்ற ஜிம், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அனைவரும் கோட், சூட் அணிந்து வந்து வாக்களித்த நிலையில், ஜட்டியுடன் ஜிம் வாக்களிக்க வந்ததை, அங்கிருந்த புகைப்படக்காரர்கள் க்ளிக் செய்து உலகளவில் ட்ரெண்ட் செய்துவிட்டனர். 

தற்போது இந்த போட்டோ தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதை அனைவரும் தங்கள் ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News