இனி சாலைகளில் சாகசம் செய்தால் லைசென்ஸ் ரத்து...!!
இனி சாலைகளில் சாகசம் செய்தால் லைசென்ஸ் ரத்து...!!
தட்சிண கன்னடா மங்களூரு நகரில் சில இளைஞர்கள், வாகன போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வீலிங் மற்றும் சாகசங்கள் செய்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்த வீடியோக்கள் 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் பரவியது. அதை கவனித்த மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அந்த சாலைகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து அபுபக்கர் சித்திக், தவுசிப் அகமது, முகமது சப்வான், முகமது அனிஸ், முகமது சோஹாலி, இலியாஸ், கிஷன் குமார் ஆகியோரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது தனித்தனியாக நான்கு வழக்குகள் பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஐந்து பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவர்கள், தங்கள் உயிருக்கு மட்டுமின்றி, மற்ற வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தினர். இந்த இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமம் கிடைக்காமல் செய்யும்படி, ஆர்.டி.ஓ-வுக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.