இளகிய மனம் கொண்டோர் இந்த செய்தியை படிக்காதீங்க...!
இளகிய மனம் கொண்டோர் இந்த செய்தியை படிக்காதீங்க...!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நாடியம்மன் கோவில் செல்லும் சாலையில் ரயில் தண்டவாளத்தின் அருகே இன்று காலை பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை பிணம் கிடந்தது.
அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் இறந்த குழந்தையை கடித்து குதறியதில் கை, கால்கள் துண்டு துண்டாகக் கிடந்தது. நாய்கள் கூட்டமாக சுற்றுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது ஆண் குழந்தை பிணம் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து தெரு நாய்களை அங்கிருந்து விரட்டிய பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு பல மணி நேரமாகியும் அவர்கள் வராததால் இதையடுத்து பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பட்டுக்கோட்டை நகர போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.