தமிழகம் முழுவதும் மதுபான விலை விரைவில் உயர்வு?
தமிழகம் முழுவதும் மதுபான விலை விரைவில் உயர்வு?
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும் வீசப்படுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுச்சூழலும் மாசு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நீலகிரியில் 1காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி பாட்டில்களை மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மீண்டும் கொடுத்து ரூ.10ஐ திரும்பபெறும் நடைமுறை அமலில் உள்ளது.
இந்த மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும்; திட்டத்தை வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.