மிகவும் பிரபல உணவகத்தின் குளிர்பானத்தில் கிடந்த பல்லி!! VIDEO

மிகவும் பிரபல உணவகத்தின் குளிர்பானத்தில் கிடந்த பல்லி!! VIDEO

Update: 2022-05-26 16:46 GMT

உலக அளவில் புகழ்பெற்ற மிகவும் பிரபலமான உணவகத்தில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இறந்த நிலையில் மிதந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

அகமதாபாத்தில் மெக்டொனால்டு கடைக்கு நண்பர்களுடன் சென்ற பார்கவ் ஜோஷி என்ற இளைஞர் இரண்டு பர்கர் மற்றும் இரண்டு கோககோலாவை ஆர்டர் செய்தார். கடையில் வழங்கப்பட்ட கோககோலாவை குடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பல்லி இறந்த நிலையில் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பல்லி குளிர்பானத்தில் மிதப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். கடை மேலாளர் குளிர்பானத்தின் விலையான ரூ.300 திருப்பித் தர முன்வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்கவ், நான் 500 ரூபாய் தருகிறேன் இந்த கோக்கை குடியுங்கள் என்று கடை மேலாளரிடம் கூறினார்.

பார்கவ் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். மெக்டொனால்டு கடைக்கு வந்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். பொது பாதுகாப்புக்காக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், நகராட்சி அலுவலகத்தின் அனுமதியின்றி மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மெக்டொனால்டு அகமதாபாத் கடையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை ஆராய்ந்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் கூறியது.

newstm.in

Similar News