உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் விவரம்: மாநகராட்சிகளில் எந்தக் கட்சி முன்னிலை..?
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் விவரம்: மாநகராட்சிகளில் எந்தக் கட்சி முன்னிலை..?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காலை 9.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில், 17 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.