உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்.. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்.. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

Update: 2022-02-15 05:00 GMT

தமிழகத்தில்  வரும்19-ம் தேதி, ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது தேர்தல் பரப்புரை குறித்து அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் வியாழக்கிழமை (17ம் தேதி) 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், ‘தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பு கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News