உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம்.. மாமியாரும் மருமகளும் மாபெரும் வெற்றி..!

உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம்.. மாமியாரும் மருமகளும் மாபெரும் வெற்றி..!

Update: 2022-02-22 16:26 GMT

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 20 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும், காங்கிரஸ் 8 இடத்தையும், அதிமுக மற்றும் சுயேட்சைகள் தலா 3 இடங்களையும் பிடித்தனர்.

இதில், காங்கிரஸ் சார்பில் 27-வது வார்டில் போட்டியிட்ட பேபி காளிராஜ் என்பவரும், 26-வது வார்டில் போட்டியிட்ட அவரது மருமகள் சித்தேஸ்வரி என்பவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், பேபி காளிராஜ் ஏற்கெனவே இரண்டு முறை வார்டு கவுன்சிலராக இருந்தவர். மருமகள் சித்ரேஸ்வரி இப்போதுதான் முதல் முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் நகராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் - மருமகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும். மாமியாரும் மருமகளும் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Similar News