வரும் மார்ச் 4 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

வரும் மார்ச் 4 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

Update: 2022-03-01 13:30 GMT

ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவதார தினவிழா நாளை மார்ச் 4ம் தேதி  கொண்டாடப்படுகிறது.அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்....

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு வைகுண்டர் அவதார நாளையொட்டி மார்ச் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நாளில் அரசு தேர்வுகள் இருந்தால் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் மார்ச் 12-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News