வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சேலத்துக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சேலத்துக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Update: 2022-07-22 11:48 GMT

சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா நோய் தொற்று காரணமாக ஆடிப் பண்டிகை நடைபெறாமல் இருந்தது.

அதனால் தற்போது இந்த ஆடிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப் பண்டிகை திருவிழாவை காண சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர அலுவல் பணிகளை கவனிக்கும் பொருட்டு மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும். மேலும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 3ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் எனும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News