வரும் 7 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!
வரும் 7 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு வருகிற 7ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அன்று ஒரு நாள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு ஏழாம் தேதி நடைபெறவுள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7ஆம் தேதி க்கு பதிலாக 19ஆம் தேதி பணி நாளாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.