இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!
இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவுக்கான சிறப்பு பூஜைகள் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிவிட்டன.
கும்பாபிஷேக தினமான 6-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சுபமுகூர்த்தத்தில் பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்சபூஜை, பிரதிஷ்டை தக்ஷிணை நஸ்காரம், உப தேவன்மாருக்கு பிரதிஷ்டை நடக்கிறது. 5.10 மணி முதல் 5.50 மணி வரை பிரதிஷ்டை, ஜீவகலச அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 6.50 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது.
கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், அழகிய மண்டபம், தக்கலை ஆகிய 5 இடங்களில் இருந்து ஜூலை 4 முதல் திருவட்டாருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, இன்று 6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.