நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

Update: 2022-04-15 12:45 GMT

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் மங்கலதேவி மலை உள்ளது.

தமிழக - கேரள எல்லையில் உள்ள இங்கு மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் இக்கோவில் கட்டப்பட்டது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழு நிலவு நாளன்று மங்கலதேவி என்ற கண்ணகிக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதில், தமிழக - கேரள மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

அதன்படி, பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா நாளை (16-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாளை தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், நாளை (16-ம் தேதி) நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் 07.05.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News