இன்று உள்ளூர் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

இன்று உள்ளூர் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Update: 2022-03-15 05:55 GMT

சைவ சமயங்களில் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவில். இந்த கோவில் ஆழித்தேர் வரலாற்று சிறப்பு மிக்கது.

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவம், சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இன்று (15-ம் தேதி) ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.

இந்நிலையில்,  தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சத்யா உத்தரவிட்டுள்ளார்.

Similar News