சீனாவில் லாக்டவுன் – இந்தியாவை பாதிக்குமா?
சீனாவில் லாக்டவுன் – இந்தியாவை பாதிக்குமா?
பெரிய அளவில் கொரோனா பாதிப்புகளை சந்தித்து வரும் சீனாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது இந்தியாவை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவில் 2021-இல் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமான தொற்றுநோய் பரவல் இந்த ஆண்டு பதிவாகி உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஷென்செனில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படியும் மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் மற்ற நகரங்களிலும் பல்வேறு அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு ஜிலின் மாகாணத்தின் தலைநகரான சாங்சுன் நகரில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த பாதிப்பு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சங்கித் தொடர்புடைய இடையூறுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. சீனாவில் பொருளாதாரம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளதால் அந்த தாக்கம் இந்தியாவிலும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரினால் உலகப் பொருளாதாரம் பெரும் அழுத்தத்தின் கீழ் இருக்கும் நேரத்தில் சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன்கள் மற்றும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் பல சாத்தியமான பொருளாதார சிக்கல்களை இந்தியாவிற்கு ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
newstm.in