3 பேரில் ஒருவரை விரட்டும் நீண்ட கால கொரோனா!!
3 பேரில் ஒருவரை விரட்டும் நீண்ட கால கொரோனா!!
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. அதில், கோவிட்-19 பாதித்த மூன்றில் ஒருவருக்கு லாங் கோவிட் எனப்படும் நீண்டகால தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு நோயிலிருந்து குணமடைந்த பின்னரும், பக்க விளைவுகளாக பல்வேறு உபாதைகள் தென்படுகின்றன. நீரிழிவு நோய் மற்றும் அதிக உடல் பருமன் கொண்ட நபர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்கள் ஆகியோருக்கு நீண்ட கால கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நீண்ட கால கோவிட் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்ற தொல்லைகள் தொடர்ந்து வருவதாக ஆய்வு கூறுகிறது. 2020 ஏப்ரல் மாதம் தொடங்கி 2021 பிப்ரவரி மாதம் வரை கோவிட் பாதிப்புக்குள்ள நபர்களிடம் 90 நாள்கள் கழித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேலும் விரிவுபடுத்தும் விதமாக பல்வேறு பகுதிகள், மருத்துவ சூழல்களை சேர்ந்தவர்களை நீண்டகால பரிசோதனைக்கு உட்படுத்த ஆய்வு குழு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்பு ஆளானவர்களின் அடிப்படை சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வு விரைந்து அளிக்க மருத்துவதுறை தயாராகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in