சிறிய அளவிலான கவனக்குறைவு எவ்வளவு பெரிய பாதிப்பு பாருங்கள்...பெற்றோர்களே உஷார்..!!

சிறிய அளவிலான கவனக்குறைவு எவ்வளவு பெரிய பாதிப்பு பாருங்கள்...பெற்றோர்களே உஷார்..!!

Update: 2022-05-23 12:37 GMT

அறிவழகன் என்பவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பரமேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது பிறந்து 10 மாதமே ஆன பரமேஸ்வரியின் 2-வது குழந்தை கிஸ்வந்த் வீட்டில் இருந்த பெயிண்டிங் தின்னரை குடித்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி உடனே குழந்தையை அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், குழந்தையை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிர்பானம் என நினைத்து பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News