திருமண நிகழ்ச்சிகளில் மணமகன் குதிரை அல்லது காரில் வருவது பார்த்து இருப்பீங்க... ஆனா இங்க...!!

திருமண நிகழ்ச்சிகளில் மணமகன் குதிரை அல்லது காரில் வருவது பார்த்து இருப்பீங்க... ஆனா இங்க...!!

Update: 2022-06-25 13:15 GMT

வடமாநிலங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் மணமகன் குதிரை அல்லது விலை உயர்ந்த காரில்தான் ஊர்வலம் வருவது வழக்கம்.

ஆனால் அங்குஷ் சற்று வேறு விதமாக யோசித்து தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். அதன்படி தனது திருமண நிகழ்ச்சியில் புல்டோசரில் சவாரி செய்ய  வேண்டும் என்ற தனது விருப்பத்தை அங்குஷ் தனது குடும்பத்தினரிடம் கூறியபோது, அவர்களும் பச்சைக்கொடி காட்டினர்.

இதைத்தொடர்ந்து சிவில் என்ஜினீயர் அங்குஷின் விருப்பம் நிறைவேறியுள்ளது. புல்டோசர் பிளேடுகளில் நண்பர்களுடன் அமர்ந்தபடி தனது திருமண நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார். என்ஜினீயர் மாப்பிள்ளை, பெரிய படிப்பெல்லாம் படித்தவர். எனவே கண்டிப்பாக காரில்தான் திருமண நிகழ்ச்சிக்கு வருவார் என்று நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் மத்தியில், தனது படிக்கும், தொழிலுக்கும் சம்பந்தப்பட்ட புல்டோரிசரில் வித்தியாசமாக வந்து இறங்கிய காட்சி பெரும் உற்சாகத்தை அளித்தது.

இதனை கண்ட பார்வையாளர்கள், உறவினர்கள் அனைவரும் அங்குஷை சந்தோஷத்துடன் வரவேற்றனர். மேலும் தங்கள் மொபைல் போன்களில் படங்கள் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அங்குஷின் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News