திருமணமான சகோதரிக்கு காதல் தொல்லை கொடுத்தவனை சகோதரன் என்ன செய்தார் பாருங்க..!!
திருமணமான சகோதரிக்கு காதல் தொல்லை கொடுத்தவனை சகோதரன் என்ன செய்தார் பாருங்க..!!
கர்நாடக மாநிலம் பீதர் நகரில் வசித்து வருபவர் அமீர்கான் (20). இவர் அப்பகுதியில் உள்ள பல் பொருள்அங்காடிக் கடையில் பணி புரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் ஜீசன் என்பவரின் திருமணமான சகோதரியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ள அமீர்கான் ஜீசன் சகோதரியிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் ஜீசனிடம் அவரது சகோதரி இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜீசன், நேற்று மதியம் அமீர்கான் வேலை செய்து வந்த பல் பொருள் அங்காடிக்கு வந்துள்ளான்.
அப்போது இதுகுறித்து அமீர்கானுடன் ஜீசன் வாக்குவாத்ததில் ஈடுப்பட்ட நிலையில், ஜீசன் தன் கையில் வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கொலைக் குற்றவாளிகளான ஜீசனை போலீசார் கைது செய்துள்ளனர்.