அடைக்கலம் தேடி வந்த தோழியிடம் கணவன்-மனைவி செய்த செயலை பாருங்க..!!

அடைக்கலம் தேடி வந்த தோழியிடம் கணவன்-மனைவி செய்த செயலை பாருங்க..!!

Update: 2022-07-19 05:55 GMT

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4-வது பிளாக் பகுதியில் வசித்து வரும் ஸ்ருதி (22) என்பவருக்கும் விஜய் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஸ்ருதி தனது கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது திருவொற்றியூர் என்.டி.குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஸ்ருதியின் தோழியான ஐஸ்வர்யா என்பவர் அவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

முதலில் நன்றாக கவணித்துக்கொண்டு வந்த ஐஸ்வர்யா, பின்னர் தனது கணவர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணாவுடன் சேர்ந்து ஸ்ருதியை வீட்டில் வேலைக்காரி போல் நடத்தியுள்ளார். மேலும், ஸ்ருதியிடம் கருமுட்டையை விற்குமாறு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ஸ்ருதியை அடித்து தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெனிஷ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா வெளியில் சென்ற நேரம் பார்த்து ஸ்ருதி வீட்டில் இருந்து தப்பித்து ஓடி வந்து தனது கணவர் விஜய்க்கு தகவல் கொடுத்து பின்னர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News