பரீட்சைக்கு செல்லும் முன் இந்த பள்ளி மாணவன் செய்த செயலை பாருங்க..!!

பரீட்சைக்கு செல்லும் முன் இந்த பள்ளி மாணவன் செய்த செயலை பாருங்க..!!

Update: 2022-05-10 04:25 GMT

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் தேர்வில் காப்பி அடிப்பதற்காக பிட்டு பேப்பர்களை எழுதி வைத்துள்ளார்.

அந்த மாணவர் தேர்வுக்கு செல்வதற்கு முன்னால் கோவில் ஒன்றில் அந்த பிட்டு சீட்டுகளை வைத்து கற்பூரம் ஏற்றி கும்பிடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவர் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குன்னத்தூரில் இருந்து வீடியோ வெளியாகிய நிலையில் வீடியோவில் உள்ள நபர் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News