சென்னையில் அமோகமாக நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனை!!

சென்னையில் அமோகமாக நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனை!!

Update: 2022-06-11 09:26 GMT

தமிழகத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லி, போரூர், கிண்டி, கோயம்பேடு, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பூடான் மற்றும் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பூடான் லாட்டரியின் விலை 70 ரூபாய்க்கும், கேரளா லாட்டரி 3 நம்பர் 80 ரூபாய்க்கும், 4 நம்பர் 110 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

நேரில் சென்று வாங்க முடியாதவர்கள் கூகுள் பே மூலம் அனுப்பி வாட்ஸ் ஆப் மூலம் நம்பரை உறுதி செய்து கொள்கின்றனர். இந்த விற்பனை கூலித் தொழிலாளர்களை குறிவைத்தே நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒருநாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னையில் அதிரடி ஆய்வு நடத்திய காவல்துறையினர் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் லாட்டரி சீட்டகள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

Similar News