காதல் மனைவி கழுத்தறுத்து கொலை.. 3வது மாடியில் இருந்து குதித்த கணவன் !!

காதல் மனைவி கழுத்தறுத்து கொலை.. 3வது மாடியில் இருந்து குதித்த கணவன் !!

Update: 2022-04-12 19:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டிகோரெயான்- ஜெப்ரினா. இவர்கள் இருவரும் 8ஆம் வகுப்பு படித்து வரும் போதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி வசித்து வந்தனர். இந்த நிலையில், ஜெப்ரினாவுக்கு திருமண வயது பூர்த்தியானதால் திருமணம் முடித்துவைக்க பெற்றோர் திட்டமிட்டனர். இதனிடையே, இருவரையும் மீட்டு தரக்கோரி பெற்றோர்கள் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

புகாரைப் பெற்றுக் கொண்ட புதுக்கடை காவல்துறையினர் இருவரையும் கண்டுபிடித்து அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மீண்டும் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஜெப்ரினா பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் போது கடந்த மே 21 ஆம் தேதியுடன் திருமண வயது பூர்த்தியானது. 

பின்பு ஜூன் 10ஆம் தேதி இருவரும் மீண்டும் வீட்டை விட்டு சென்னைக்கு சென்றனர். அங்கு வீடு வாடகைக்கு எடுத்து பணிக்குச் சென்று வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் சென்னையில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், ஸ்டிகோரெயானின் தாய் ஹெலன் திண்டுக்கலில் வசிக்கும் நிலையில் அங்கே இருவரும் சென்றனர். திண்டுக்கல் அருகே உள்ள தெப்பக்குளத்து பட்டியில் அரசு பள்ளியில் ஹெலன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்கே, மூன்று பேரும் சேர்ந்து திண்டுக்கல் ஓ.எம்.ஆர். பட்டி நடுத்தெருவில் 3 மாதத்துக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்துதங்கியுள்ளனர். 

இந்நிலையில், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், ஜெப்ரினாவுக்கு கோவையில் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை கிடைத்துள்ளது. இதனால் அங்கு சென்ற அவர், வேலை பார்த்துக் கொண்டு பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். காதல் மனைவி பிரிந்து சென்ற பின்பு இன்ஸ்டாகிராம் மூலம் மனைவி எங்கு உள்ளார் என்பதை கண்டறிந்து மூன்று தினங்களுக்கு முன்பு கோவை சென்றுள்ளார். 
அங்கே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது தாய் ஹெலன் சமாதானம் செய்துவைத்த நிலையில், நாம் முன்பு சென்னையில் இருந்தது போல மீண்டும் சென்னைக்கு சென்று விடுவோம் என்று ஸ்டீகோரெயான் கூறியுள்ளார். ஆனால் ஜெப்ரினா, நான் கோவையில் இருந்து படித்துக்கொண்டே பணியாற்றி வருகிறேன் சென்னைக்கு வர முடியாது என்று கூறியுள்ளார். 

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. ஆத்திரமடைந்த ஸ்டீகோரெயான் தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். காதல் மனைவியை படுகொலை செய்த பயத்தில் தானும் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் இறந்துபோன ஜெபினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Similar News