சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்!!

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்!!

Update: 2022-06-06 07:00 GMT

சென்னையில் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா நகர் மேற்கு ஜீவன் பீமா நகரைச் சேர்ந்த  தொழிலதிபர் கணேசன், உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக திருமங்கலத்திலிருந்து இனோவா சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, திடீரென கார் பலத்த சத்தத்துடன் வெடித்து தீ பற்றி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சாலையிலிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இது குறித்து உடனே தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.பின்னர் காரில் சிக்கியிருந்த கணேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இந்த தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்து தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News