உலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்தது 'செம்மொழியான தமிழ்' பாடல்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்- வீடியோ
உலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்தது 'செம்மொழியான தமிழ்' பாடல்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்- வீடியோ
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 25 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அங்கு தமிழ்நாடு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, சர்வதேச முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இந்த எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டிற்கான அரங்கை நேற்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் விளக்கும் வகையில் காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர், 3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்!, என பதிவிட்டுள்ளார்.
3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது.
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022
குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.
இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! pic.twitter.com/Thu2C7kPB2