ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்காவிட்டால் பொதுமக்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள். எனவே, தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக மோசமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தேரூர், மருங்கூர், கொட்டாரம், அழகியபாண்டியபுரம், தோவாளை, ஆரல்வாய்மொழி மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளிலும் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான அரிசி வழங்காவிட்டால் பொதுமக்கள் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறார்கள்.
குறிப்பாக தேரூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எனவே, கூட்டுறவு சங்க இணை பதிவாளர், கூட்டுறவு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனால், ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி கிடைக்கும் என கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.