மக்கள் கூட்டத்தில் புகுந்த கார்… எம்.எல்.ஏ வெறிச்செயல்!! VIDEO
மக்கள் கூட்டத்தில் புகுந்த கார்… எம்.எல்.ஏ வெறிச்செயல்!! VIDEO
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏவின் கார் மக்கள் கூட்டத்தில் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக், அவரது கட்சி எம்.எல்.ஏ பிரசாந்த் ஜக்தேவை அண்மையில் சஸ்பெண்ட் செய்தார்.
அவர் பட்டியலின தலைவர் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து பிரசாந்த் ஜக்தேவிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துவருகிறது.
அந்தவகையில், ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள பானாபூர் பகுதி அருகே அவருக்கு எதிராக கூடியிருந்த மக்கள் மீது பிரசாந்த் ஜக்தேவின் வாகன மோதியது. இந்த விபத்தில் 10 காவலர்கள், 2 பத்திரிகையாளர்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்து சிலர் பிரசாந்த் ஜக்தேவை கடுமையாக தாக்கினார்கள். இதில் பிரசாந்த் ஜக்தேவ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
BJD MLA riding car on public in Odisha !@AmanChopra_@AskAnshul @anjanaomkashyap @RubikaLiyaquat @SushantBSinha pic.twitter.com/IM6EmeiieM
— 𝓑𝓲𝓴𝓪𝓼𝓱 𝓼𝓪𝔂𝓼... (@DasBikashranjan) March 12, 2022
மேல் சிகிச்சைக்காக புனேஷ்வரில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் பிரசாந்த் ஜக்தேவ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
newstm.in