58 வயதில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய எம்எல்ஏ !!

58 வயதில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய எம்எல்ஏ !!

Update: 2022-04-30 09:47 GMT

பள்ளிப்பருவத்தில் குடும்ப பிரச்சனையால் எழுதமுடியாமல் போன பத்தாம் வகுப்பு தேர்வை, 40 ஆண்டுகளுக்கு பின் எம்.எல்.ஏ. ஒருவர் எழுதி அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாநில வாரிய தேர்வு நேற்று நடந்தது. இதில் மொத்தம் 5.8 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இந்த தேர்வில் இந்திய அளவில் சுவாரசிய நிகழ்வாக எம்எல்ஏ ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 

ஒடிசாவின் புல்பானி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 58 வயதான அங்கத கன்ஹார் என்பவர் உள்ளார். ஆளும் பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த கன்ஹார் ருஜாங்கி உயர்நிலை பள்ளியில் தனது இரு நண்பர்களுடன் தேர்வெழுதினார். அவர்களில் ஒருவர் கிராம தலைவர் ஆவார். 

இதுபற்றி எம்எல்ஏ கன்ஹார் கூறும்போது, கடந்த 1978ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்து வந்தேன். ஆனால் குடும்ப பிரச்சனைகளால் அப்போது 10ஆம் வகுப்பு தேர்வெழுத முடியவில்லை.
 
சமீபத்தில், 50 வயதுடையோரும், அதனை கடந்தோரும் கூட தேர்வு எழுதுகிறார்கள் என என்னிடம் சிலர் கூறினர்.  அதனால், வாரிய தேர்வை எழுத நானும் முடிவு செய்தேன். கல்வி கற்பதற்கோ அல்லது தேர்வு எழுதுவதற்கோ வயது தடையில்லை என்று அவர் கூறியுள்ளார். வயதை பொருட்படுத்தாமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய எம்எல்ஏவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 


newstm.in

Tags:    

Similar News