பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவில் வெற்றியடைந்துள்ளதாகவும், இது புதிய இந்தியா என்றும் நடிகர் மாதவன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

பிரான்சில் நடைபெற்று வரும் கேன் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் தனது பதவிக்காலத்தை தொடங்கியபோது, அவர் மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்.

விவசாயிகளுக்கு ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தவோ, கையாளவோ தெரியாத ஒரு நாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் பேரழிவாக இருக்கும் என்று உலகம் சந்தேகித்ததாகவும், ஆனால் இரண்டு ஆண்டுகளில் முழுக் கதையும் மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது மைக்ரோ பொருளாதாரத்தை சிறப்பாக பயன்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது, இதுதான் புதிய இந்தியா என்று தெரிவித்தார். மத்திய அரசு அடிக்கடி பயன்படுத்தும் 'புதிய இந்தியா' எனும் வார்த்தையை தற்போது நடிகர் மாதவன் உச்சரித்துள்ளார்.


மாதவனின் இந்த வீடியோவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நடிகர் மாதவனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். விருது வேண்டுமென்றால் நேரடியாக கேட்ட வேண்டியது தானே என்று மீம்ஸ் போட்டு கலாய்க்கின்றனர்.

newstm.in